கொக்கி போட்டு பொதுக்கூட்டம்!

கொக்கி போட்டு பொதுக்கூட்டம்!

Share it if you like it

திருட்டு மின்சாரத்தின் துணையுடன் பொதுக்கூட்டம் நடத்திய தி.மு.க.வினருக்கு குவிந்து வரும் கண்டனம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராம் நகரில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க மாவட்ட கழகச் செயலாளரும் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில், ஏராளமான முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது, பொதுக்கூட்டத்திற்கு தேவையான மின்சாரம், அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழக மக்களுக்கு பா.ஜ.க தலைவர் எச்சரிக்கை!

பி.ஜி.ஆர் எனர்ஜி என்ற பெயரில் பேப்பரிலேயே இயங்கக்கூடிய நிறுவனத்திற்கு டான்ஜெட்கோ ஒப்பந்தம் செய்துள்ளது. தகுதியே இல்லாத இந்த நிறுவனத்திற்கு ரூ.4,442 கோடி ஒப்பந்தத்தை தமிழக மின்வாரியம் கொடுத்திருக்கிறது. கோபாலபுரத்தில் தொடர்பு இருப்பதாலேயே பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி அடிக்கடி தமிழகத்தில் மின்வெட்டு வரலாம். மக்கள் தங்கள் வீடுகளில் யுபிஎஸ், ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அண்ணாமலை எச்சரிக்கை விடுத்து இருந்தார். பா.ஜ.க தலைவர் கூறியது போல தமிழகத்தில் வெகுவிரைவில் மின்வெட்டும், மின்தட்டுப்பாடும் ஏற்படும் என்பதற்கு ஒசூரில் கள்ளத்தனமாக கொக்கி போட்டு திருட்டப்பட்ட மின்சாரமே சிறந்த சான்று.


Share it if you like it