உலக நாடுகள் இன்று வரை ரத்த கண்ணீர் வடித்து வருவதற்கு சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்றின் வீரியத்தை உலக நாடுகளிடம் இருந்து மறைத்ததே இதற்கு காரணம் என்று வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன. இந்நிலையில்
சீன வைராலஜிஸ்ட் யான் அவர்கள் அண்மையில் ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறியுள்ளார்.
சீன அதிகாரிகளுக்கு இந்த கொடிய வைரஸ் பரப்புவதை பற்றி முன்பே தெரியும் என்று நான் நம்புகிறேன். கொரோனா வைரஸின் வீரியத்தை சீன அரசாங்கம் டிசம்பர் மாதம் முதலே நன்கு உணர்ந்து இருந்தது. ஆனால் அதனை உலக நாடுகளுக்கு தெரியாமல் பார்த்து கொண்டது.
மனிதனுக்கு மனிதன் இத்தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. பல உயிர்களை காக்க முடியும் என்கின்ற எனது ஆய்வை மேற்பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். பல சீன விஞ்ஞானிகள் வைரஸ் குறித்து பொதுமக்களை எச்சரிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் குரல் ஒலிக்காமல் அரசாங்கம் பார்த்து கொண்டது. மற்றவர்களும் இந்த விஷயத்தை பற்றி வெளியில் பேச கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். ஆனால் முககவசம் மட்டும் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
WHO ஆலோசகர் மாலிக் பீரிஸ் நோய் தொற்று பரவுவது பற்றி நன்கு அறிந்திருந்தார், ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அவர் முடிவு செய்திருந்தார். பீரிஸ் WHO- உடன் இணைந்த ஆய்வகத்தின் இணை இயக்குநராக இருந்தவர். அண்மையில் அவர் திடீர் என்று பதவி விலகியுள்ளார். சீனாவில் இருந்து தப்பி தற்பொழுது தலைமறைவாக இருக்கும் யான் இப்பேட்டியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.