கொடூங்கோல் ஆட்சியை எதிர்த்து…! புலம் பெயர்ந்த சீன மக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு….!

கொடூங்கோல் ஆட்சியை எதிர்த்து…! புலம் பெயர்ந்த சீன மக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு….!

Share it if you like it

சீனாவில் எழுத்துரிமை, பேச்சுரிமை, மத சுதந்திரம், 100% முற்றிலும் மறுக்கப்பட்ட அவலநிலையே இன்று வரை தொடர்கிறது. உய்குர் முஸ்லீம் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக குடும்ப கட்டுப்பாடு,  குழந்தைகளை தாயிடம் இருந்து பிரித்து வதை முகாம்களில் அடைத்து சித்தரவதை செய்வது அல்லது கொல்வது என்று தினம் தினம் இஸ்லாமியர்கள் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.

சீனாவின் அட்டூழியங்களை பொறுக்க முடியாமல் நாட்டை விட்டே தப்பி ஓடியவர்கள்.  அண்டை நாடுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கும் உய்குர் இஸ்லாமியர்கள் மற்றும் மிக கடுமையாக அந்நாட்டினால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் சீனாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

சீன முஸ்லீம் மக்களை காக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார்,  பெரும்பாலான முஸ்லீம்கள் குறட்டை விட்டு கொண்டு இருக்கின்றனர். மதக் குழுக்கள் மீதான சீனர்களின் ஒடுக்குமுறை அதிகரித்து கொண்டே வருகிறது. பெரும்பாலான தலைவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று அண்மையில் இஸ்லாமிய மக்களின் நன்மதிப்பை பெற்ற இமாம் தவ்ஹிடி கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it