கொரோனாவால் பீதியடைந்த எம்.பிக்கள் – பார்லிமென்ட் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும், மக்களுக்கு சேவை செய்வதே நமது கடமை –  மோடி !

கொரோனாவால் பீதியடைந்த எம்.பிக்கள் – பார்லிமென்ட் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும், மக்களுக்கு சேவை செய்வதே நமது கடமை – மோடி !

Share it if you like it

  • பார்லிமென்ட் பட்ஜெட் தொடர்பான கூட்டம் மார்ச் மாதம் 2 ல் தொடங்கி ஏப்ரல் 3 வரை நடைபெறும் என்று மத்திய அரசு முன்கூட்டியே அறிவித்தது. அதன்படி கூட்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்று எம்.பிக்கள் சிலர் வலியுறுத்தினர். இந்நிலையில் கொரோனா விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக டெல்லியில் நேற்று பார்லிமென்ட் கூட்டம் நடந்தது.
  • அதில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக நமக்கு உள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பார்லிமென்ட் கூட்ட தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டுமென்று எம்.பிக்கள் கூறியது எனக்கு மன வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. எம்.பிக்களாகிய நாம் நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் பிரதிநிதிகள், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. எனவே பார்லிமென்ட் கூட்டம் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார்.

Share it if you like it