கொரோனாவால் 9 பேர் பலி என்று டுவிட்டரில் கூறிவிட்டு பின்பு அதிரடியாக நீக்கிய ஸ்டாலின்!

கொரோனாவால் 9 பேர் பலி என்று டுவிட்டரில் கூறிவிட்டு பின்பு அதிரடியாக நீக்கிய ஸ்டாலின்!

Share it if you like it

கொரோனா வைரஸால் இதுவரை 15,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என பலர் தமிழகம் முழுவதும் கடுமையாக கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் நிலையில்.

ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில்

எதிர்க்கட்சி தலைவர் என்கின்ற பொறுப்பை உணராமல் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், பதற்றத்தையும், ஏற்படுத்தி மத்திய, மாநில, அரசுகளின் மீது மக்களுக்கு தவறான எண்ணத்தை, விதைக்கும் முயற்சியாக ஸ்டாலின், இன்று தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு எனவும், 8,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை, எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாத நிலையில், உண்மைக்கு புறம்பாக செய்தி, வெளியிட்டு இருந்தார். இதனை அடுத்து டுவிட்டரில் குடியிருப்போர் பலர் ஸ்டாலின், பக்கத்தில் சென்று வறுதெடுத்த நிலையில் அப்பதிவியை அதிரடியாக, நீக்கி இருப்பது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டுவிட்டரில் போலி செய்தி ஸ்டாலின் என்ற ஷேஸ் டேக் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் டிரண்டிங்கில் உள்ள ஷேஸ் டேக்

 

 


Share it if you like it