கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் எங்கள் உழைப்புக்கு கிடைத்த மரியாதை, இன்னும் கடினமாக உழைக்க தூண்டுகிறது – மருத்துவ ஊழியர்கள் !

கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் எங்கள் உழைப்புக்கு கிடைத்த மரியாதை, இன்னும் கடினமாக உழைக்க தூண்டுகிறது – மருத்துவ ஊழியர்கள் !

Share it if you like it

  • கொரோனா நோய் தொற்றினால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் பொழுதுபோகாமல் தவித்து வருகின்றனர். ஆனால் இந்த நெருக்கடி காலகட்டத்திலும் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர்,துப்புரவு தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்கள் குடும்பத்தையும் விட்டு நாட்டுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், பெருமைப்படுத்தி பாராட்டும் வகையிலும் பாரத பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களை கைதட்டி, விளக்கேற்ற சொல்லி பெருமைப்படுத்தினார்.
  • இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மீது வானுர்தி மூலம் மலர்களை தூவி கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை பெருமைப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
மருத்துவமனைகள் மீது ராணுவ வீரர்கள் மலர் தூவும் காட்சி
  • எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதையை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம். இது எங்களுக்கு இதற்குமுன் எப்போதுமே கிடைக்காத அனுபவம் “என்று டிஜிஹெச்சில் ஒரு பாராமெடிக்கல் ஊழியர் கூறினார். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் கடின உழைப்பால் நாங்கள் மத்திய அரசால் கவுரவிக்கப்பட்டோம், இது இன்னும் கடினமாக உழைக்க நமது மன உறுதியை அதிகரிக்கும் என்று பாராமெடிக்கல் ஊழியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கூறியுள்ளனர்.

Share it if you like it