Share it if you like it
- டெல்லி காவல்துறையினர் கொரோனா நோய் தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் அலைபேசி எண்களை போலீசார் குறித்து வைத்துள்ளனர். இதனால் அந்த அலைபேசி எண்களை வைத்து கண்காணித்து வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் வழிகாட்டுதல்களை மீறவில்லை என்பதை சரிபார்க்க நோயாளிகளின் வீட்டுக்கு திடிரென்று சென்று சந்தித்து வருகிறார்கள். மேலும் போலீசார் வருகையின்போது வீட்டு தனிமைப்படுத்தலை மீறியதாகக் கண்டறியப்பட்ட மொத்தம் 198 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- டெல்லி காவல்துறையினர் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் 25,000 க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசி எண்களைக் கொண்டுள்ளனர். காவல் துறையின் அறிக்கையின்படி, புது தில்லியின் முகர்ஜி நகரில் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் மாலை நடைப்பயணத்தில் சிக்கினார். அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதேபோல், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் ஒரு நபர் காலை நடைப்பயணத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் துறையின் இந்த வித்தியாசமான நடவடிக்கைளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்
Share it if you like it