கொரோனவால் பாதிக்கப்பட்ட மற்றொரு நண்பர் நம்முடன் பேச இருக்கிறார். அவரது குடும்பம் முழுவதும், அவரது இளம் மகன் உட்பட பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆக்ராவிலிருந்து அசோக் கபூர் சொல்வதை கேட்போம்.
மோடி : நமஸ்தே
அவர் : நமஸ்தே ஐயா, உங்களுடன் பேசுவது எனக்கு பாக்கியம்.
மோடி : உங்களோடு பேசுவதால் நானும் பாக்கியம் அடைகிறேன். உங்கள் முழு குடும்பமும் இந்த நெருக்கடியால் சிக்கியுள்ளதால் நான் உங்களை அழைத்தேன். உங்களுக்கு தொற்று இருப்பது எப்படி கணடறியப்பட்டது. மருத்துவமனையில் உங்களுக்கு என்ன சிகிச்சை அளித்தார்கள். நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் என்ன என்பதை நான் அறிய விரும்புகிறேன்.
அவர் : எனக்கு இரு மகன்கள். சமீபத்தில் அவர்கள் ஒரு ஷூ கண்காட்சியில் கலந்துகொள்ள இத்தாலி சென்றனர் . எங்களிடம் ஷூ உற்பத்தி பிரிவு ஒன்று உள்ளது. டெல்லியில் வசிக்கும் எங்கள் மருமகனும் அவர்களுடன் இத்தாலியில் இருந்து திரும்பி வந்தனர். அவர் சிறிது உடல்நலம் பிரச்சனையாக இருப்பதாக உணர்ந்தார். பின்னர் ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எங்கள் இரு மகன்களும் பரிசோதிக்க வேண்டும் என்று எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. எனவே எனது இரு மகன்களும் பரிசோதனைக்காக ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவர்கள் அவர்களிடம் உங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வர சொன்னதால், நாங்கள் என் குடும்பத்தை சேர்ந்த ஆறு உறுப்பினர்கள், எனது இரு மகன்கள், என் மனைவி, நான் எனக்கு வயது 73, எனது மருமகள்,மற்றும் 16 வயதான எனது பேரன் என அனைவரும் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். பரிசோதனையில் அனைவர்க்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் எங்களை டெல்லிக்கு வரும்படி கேட்டுக்கொண்டனர். நோய் தொற்றினால் யாரும் பயப்படவில்லை. பின்னர் ஆக்ரா மருத்துவமனை இலவசமாக ஆம்புலன்சில் மருத்துவருடன் டெல்லிக்கு சென்றோம். ஆக்ராவில் முழு ஒத்துழைப்பை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நாங்கள் பெரிதும் நன்றி கூறுகிறோம்.
மோடி : நீங்கள் ஆம்புலன்சில் சென்றிர்களா ?
அவர் : ஆம்.ஐயா. நாங்கள் ஆம்புலன்சில் மிக சௌகரியமாக சென்றோம். அவர்கள் எங்களை சப்தர்ஜங் மருத்துவமனையில் இறக்கிவிட்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் எங்களுக்கு உதவி செய்ய நின்று கொண்டிருந்தனர். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு தனி அறையில் நியமிக்கப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டோம். அங்கு அறைகள் மிக நன்றாக இருந்தது. அங்கு 14 நாட்கள் தங்கினோம். மருத்துவர்களும். அங்குள்ள பணியாளர்களும் எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார்கள். அவர்கள் கொடுத்த அறிவுரைகளுக்கு நாங்கள் கீழ்படிந்தோம். நாங்கள் ஒரு சிறிய பிரச்சனையை கூட எதிர்கொள்ளவில்லை.
மோடி : உங்கள் குடுமபம் இத்தகைய ஒரு நெருக்கடியை சந்தித்துள்ளது. 16 வயது உடைய சிறுவனும் பாதிக்கப்பட்டுள்ளான் ?
அவர் : ஆம். ICSC தேர்வு எழுத வேண்டியிருந்தது. நான் அந்த தேர்வை மறந்துவிடு என்று கூறினேன். ஏனெனில் ஆரோக்கியத்திற்கு தான் நாம் முதலில் முன்னுரிமை அளிக்கவேண்டும்.
மோடி : உங்கள் அனுபவம் உங்கள் குடுபத்திற்கு கை கொடுத்தது. நீங்கள் உங்கள் குடும்பத்தாரின் மன நிலையை உறுதிப்படுத்திகொண்டீர்களா ?
அவர் : குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்தனர். எங்களால் சந்திக்க முடியவில்லை என்றாலும், அலைபேசி மூளும் நாங்கள் தொடர்பில் இருந்தோம். மருத்துவர்கள் எங்களுக்கு தகுந்த சிகிச்சைகளை வழங்கினார்கள். நாங்கள் அவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
மோடி : நோயிலிருந்து உங்கள் குடும்பம் மீண்டதற்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் உங்களை சுற்றியுள்ள பகுதிகளில் இதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
அவர் : எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.உங்களிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று உதவி செய்வதற்கும்,விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் தயாராக இருக்கிறோம்.
மோடி : நீங்கள் பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளிக்கலாம். ஏழைகளை கவனித்து கொள்ளலாம். மேலும் விதிகளை பின்பற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அனைவரும் விதியை சரியாக கடைபிடித்தால் நாடு சரியாகிவிடும்.
அவர் : நாங்கள் வீடியோக்களை உருவாகி அதை ஊடகங்களில் கொடுத்து ஒளிபரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
மோடி : மிக்க மகிழ்ச்சி. நன்றி
அவர் : நன்றி ஐயா.