கொரோனா என்னும் கொல்லை நோய், உலக நாடுகளையே பந்தாடி வருகிறது. இன்று எங்கு பார்த்தாலும் அழுகை, கதறல், சோகம், பயமே அனைவரின் மனதிலும் குடி கொண்டுள்ளது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பு மூன்று முறைக்கு மேல் பாராட்டியுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் தியாகத்தின் மூலம் இக்கொடிய நோய் தனது கோர மூகத்தை இங்கு காட்ட முடியவில்லை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து, இந்தியாவிற்கு சுற்றுலா, வந்த பத்தாயிரம் பேரில். நான்காயிரம் பேர் சிறப்பு விமானம், மூலம் தங்கள் நாடுகளுக்கு, திரும்பி விட்டனர். மற்ற ஆறாயிரம் பேரை அந்நாட்டு வெளியுறவுத்துறை அணுகியது. தற்பொழுதைய சூழலில் இந்தியாவில், இருக்கவே விரும்புகிறோம். தற்பொழுது தாயகம் திரும்ப விருப்பம் இல்லை, என்று அவர்கள் கூறியுள்ளதாக, அந்நாட்டின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.