கொரோனா தொற்று சீனாவில் பிறந்து இன்று உலக நாடுகளையே கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில். ஈரான், இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் உள்ள அப்பாவி மக்கள் பலர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இதுவரை 15,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, மக்கள் உயிர் இழந்துள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 117 நாடுகளில் தனது பேயாட்டத்தை துவங்கியுள்ளது கொரோனா. இந்தியா முழுவதும் மார்ச் 31-ம் தேதி வரை அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில் பீகார் மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு, பயந்து வெளிநாட்டு முஸ்லீம்கள் பாட்னாவில் உள்ள, மசூதி ஒன்றில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அதிரடி வேட்டையில், இறங்கிய காவல்துறை பாட்னாவில், இருக்கும் குர்ஜி மசூதியில் பதுங்கி இருந்த 12 வெளிநாட்டு, முஸ்லீம் மதபோதகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில். இந்த மதபோதகர்கள் பீகாரில் சுதந்திரமாக திரிந்துள்ளனர் என்பதும். இவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா என்கிற கோணத்தில் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இத்தனை நாட்கள் இவர்கள், உள்ளூர் முஸ்லிம்களின், உதவியுடன் மசூதியில் மறைந்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.