Share it if you like it
- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியர்கள் யாரும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடுகள் செய்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
- இந்நிலையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு வர விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஈரான் அரசு பயணிகளுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை சோதிக்க மறுத்துள்ளனர்.
- இந்த தகவல் இந்தியாவுக்கு தெரியவர இந்தியர்களை பரிசோதிக்க இந்திய அரசு விஞ்ஞானிகளுடன் ஒரு முழு ஆய்வகத்தையும் ஈரானுக்கு அனுப்பியது. பரிசோதனைக்கு பின் அவர்கள் விமானத்தில் ஏற்றப்பட்டனர். அதன் பின்னர் சோதனைக்கு எடுத்து செல்லப்பட்ட அனைத்து பொருட்களையும், மேலும் முழு ஆய்வகத்தையும் இந்தியா, ஈரானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it