மத்திய, மாநில அரசுகளின் உத்தரவினை மீறி கடந்த மார்ச் முதல் வாரத்தில் தப்லீக் ஜமாத் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. நாடு முழுவதிலிருந்தும் 9 ஆயிரம் பேர் அம்மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் இருப்பிடங்களுக்கு சென்று விட்டனர்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, என்று பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டனர். அரசின் அறிவுறுத்தலையும் மீறி வெளிநாட்டு இஸ்லாமியர்கள் அம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
தப்லிகி ஜமாத்துக்கு எதிராக டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
தப்லீக் ஜமாத் மாநாட்டில் மலேசியா மற்றும் இந்தோனேசிய உறுப்பினர்களால் நோய் தொற்று இந்தியாவில் ஆரம்பமாக மூல காரணமே அவர்கள் தான் என்று அக்குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.