கொரோனா நெருக்கடி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இலவச அரிசி நியாயமா !

கொரோனா நெருக்கடி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இலவச அரிசி நியாயமா !

Share it if you like it

முஸ்லிம்களுக்கு புனிதமான ரம்ஜான் விரைவில் துவங்கவிருக்கிறது. இதற்காக தமிழக அரசு 5,450 டன் அரிசியை 2,895 மசூதிகளுக்கு ஒதுக்கி, இவற்றை அந்தந்த மசூதிகள் முஸ்லீம் மக்களுக்கு கொடுக்க ஆணை பிறப்பித்துள்ளது.

இது அரசின் கொள்கை முடிவு, எனவே இது பற்றி கேள்வி கேட்க விரும்பவில்லை. முஸ்லீம் சகோதர சகோதரிகள் தங்கள் மனசாட்சியிடம் கேட்க வேண்டிய சில கேள்விகளை மட்டுமே தருகிறோம்.

1. ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து ரேஷன் பொருட்களும் அனைத்து அட்டைதாரகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது, மே மாதமும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் அரசிடம் இருந்து மேலும் அரிசி பெறுவது நியாயமா?

2. நாட்டு நலன் கருதி ஊரடங்கு எடுக்கப்பட்டாலும், பல்லாயிரம் பேர் வருமானம் இழந்துள்ளது நாம் அறிவோம். இவர்களுக்கு அரசும், தன்னார்வலர்களும் பல சவால்களுக்கு இடையே உதவி வருகின்றனர். உங்களை நோன்பு இருக்காதீர்கள் என்று சொல்லவில்லை, ஆனால் ஏற்கனவே ரேஷனில் இருந்து பொருள் பெற்றுவிட்ட நிலையில், மீண்டும் கூடுதலாக பெற்று, அடுத்தவருக்கு செல்ல வேண்டிய அரிசியை, நீங்கள் பெறுவது நியாயமா?

3. நபிகள் ஒவ்வொரு நாளும் தனக்கு கிடைத்த உணவை அடுத்தவருக்கு தந்து விட்டு தான் உறங்க செல்வார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நீங்களோ மேலும் மேலும் வாங்கி வைத்துக் கொள்கிறீர்களே, இது தான் நபியை நீங்கள் பின்பற்றும் முறையா?

4. எல்லோருக்கும் ரேஷனில் கிடைக்கவில்லை என்று வாதிடலாம். ரேஷனில் பொருள் கிடைக்காதவர்கள் மட்டும் அரிசி பெற்றுக் கொள்ளலாமே? ஏன் எல்லோரும் கேட்கிறீர்கள்?

5. அரசு கொடுக்கிறது, நாங்கள் பெற்றுக்கொள்கிறோம் என்று நீங்கள் கூறலாம். பல லட்சம் பேர் கேஸ் மானியம் வேண்டாம் என்று கூறியுள்ளார்கள், இந்த மாதம் அரசு அளிக்கும் 1000 ரூபாய் நிதி வேண்டாம் என்று பல ஆயிரம் பேர் கூறிவிட்டார்கள். அதே போல நீங்களும் ‘எங்களுக்கு அரிசி வேண்டாம், நிவாரண பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று விட்டுத் தரலாமே ?

6. ஒருவேளை மசூதியில் இருந்து அரிசி பெறுவது உங்கள் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். அப்படி பார்த்தாலும், ஏன் அரசை எதிர்பார்க்கவேண்டும். இல்லாதவருக்கு உதவி செய் என்று குரான் சொல்வதாக சொல்கிறீர்கள், அப்படி என்றால் இல்லாதவர்களுக்கு, இருப்பவர்கள் உதவி செய்யட்டுமே? அரசை ஏன் எதிர்பார்க்க வேண்டும்?

7. ஒவ்வொரு மசூதிக்கு பல நூறு பேர் வருகிறார்கள். அவர்களில் வசதி படைத்த ஒரு சிலர் சேர்ந்து, பொருள் சேர்த்து, ஏழைகளுக்கு அரிசி வாங்கி தரலாமே? அப்படி செய்தால் தானே நீங்கள் குரான் சொல்படி வாழ்வதாக அர்த்தம்.

அரசிடம் இருந்து அரிசி பெற்று, மக்களுக்கு கொடுத்தால் மசூதி, ஒரு பண்ட விநியோக கடையாக அல்லவா மாறிவிடும். அதை தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

8. 3,000 மசூதிகள் உள்ளன, ஒவ்வொரு மசூதிக்கும் 5 பேர் சேர்ந்தாலே, அரசின் உதவி இல்லாமலேயே, அனைவருக்கும் ரம்ஜான் கொண்டாட ஏற்பாடுகள் செய்ய முடியும். தமிழ்நாட்டில் நல்ல உள்ளம் படைத்த 15,000 பேர் கூட இல்லையா என்ன?

முஸ்லிம்களே, உங்கள் மனசாட்சியை கேளுங்கள், “நான் மேலும் மேலும் சேர்க்கப் போகிறேனாஅல்லது இல்லாதவர்களுக்கு விட்டுக் கொடுக்க போகிறேனா?

விட்டுக் கொடுக்கப்போவதாக இருந்தால், உங்கள் மசூதி நிர்வாகத்திடம் கூறி ‘அரசின் உதவி வேண்டாம்’ என்று கூறுங்கள். உங்கள் நெட்ஒர்க் மிக பெரியது, நீங்கள் நினைத்தால் ஒரே நாளில் இதை செய்ய முடியும்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?


Share it if you like it