ஆசிரியர் கட்டுரையாளர், எழுத்தாளர், என பன்முகத் தன்மை கொண்டவர் தாரெக் ஃபத்தா அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் மத குரு ஒருவர் பேசிய காணொலியை அண்மையில் வெளியிட்டு தனது கருத்தினையும் இவ்வாறு தெரிவித்து இருந்தார்.
கொரோனா வைரஸை அழிக்க பாகிஸ்தானி முல்லாவின் அற்புதமான திட்டம்:
நீங்கள் தூங்கினால், வைரஸும் தூங்குகிறது; நீங்கள் இறந்தால், வைரஸும் இறந்துவிடும். ”எனவே, கொரோனா வைரஸை அழிக்க, உங்களையே அழித்து கொள்ளுங்கள்! என்ன மாதிரியான பொய் மூட்டை, பாகிஸ்தான் எப்படி தான் இவ்வளவு அசிங்கங்களை உருவாக்குகிறது? என்று ஃபத்தா கிண்டல் செய்து இருந்தார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி முடியை வெட்டினால் கொரோனா நோய் குணமாகும் என்று கூறி அவரே அப்பாவி மக்களின் முடியை வெட்டி விடுவதும். சிவப்பு தொப்பி நபர் காசு வாங்கி துணிப்பையில் திணிப்பதை பார்த்து, உலகம் முழுவதும் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Dr @SMQureshiPTI treating #Corona patients in #Pakistan.
Meanwhile Medicine, Dexamethasone also becoming unavailable&Dr Fahad shot by a Counter-Terrorism Department policeman at National Institute of Cardiovascular Diseases (NICVD), #Karachi.
Riyasat-e-Madina!#Pakistan #UNSC pic.twitter.com/5fnBliONCE— Azeema (@azeema_1) June 18, 2020