பெய்ஜிங்கின் சிங்குவா பல்கலைக்கழகத்தின் சீன சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் சூ ஜாங்ருன், ஒரு இணையதளத்தில் “Imminent Fears, Immediate Hopes” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை கடந்த 6ம் தேதி வெளியிருந்தார் இதில் கொரோனா பரவலுக்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தான் காரணம் என்றும் அவர் முன்கூட்டியே உலகநாடுகளை எச்சரிக்காமல் மெத்தனப்போக்கு காட்டினார் என எழுதி இருந்தார்.
இந்த கட்டுரை கண்ணில்பட்ட உடனே காவல் துறையை ஏவி விட்டு இவரது குடும்பத்தினருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர், இன்றுவரை அவரது நிலை என்ன ஆனது என்பது பற்றிய எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சீனாவில் இது போன்ற சம்பவங்கள் புதிதல்ல என்றாலும் ஜார்ஜ் ப்லாய்ட் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எதிராக கருத்து சுதந்திரம் கொந்தளித்த கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சி ஆட்சி செய்யும் சீனாவின் இந்நிலை குறித்து, இதுவரை வாய்திறக்காதது ஏன் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.