கொரோனா மருத்துவ கருவிகள் தரமற்றவை  – சீனாவை கழுவி ஊத்திய ஐரோப்பிய நாடுகள்  !

கொரோனா மருத்துவ கருவிகள் தரமற்றவை – சீனாவை கழுவி ஊத்திய ஐரோப்பிய நாடுகள் !

Share it if you like it

  • வெற்றிகரமாக கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்திவிட்டோம் என்றும் எங்களிடம் கொரோனா வைரஸை கண்டறிவதற்கான அதிநவீன மருத்துவ கருவிகள் உள்ளது என்றும் சீனா பிரச்சாரம் செய்து வந்தது. மேலும் மருத்துவ கருவிகளை பிற நாட்டினருக்கும் நாங்கள் வழங்க தயாராக உள்ளோம் என்றும் சீனா கூறியது. இதனால் பல நாடுகள் போட்டி போட்டுகொண்டு சீனாவிடம் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த கருவிகள் அனைத்துமே தரமற்றவை என இறக்குமதி செய்த ஐரோப்பிய நாடுகள் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • சீன கருவிகள் 30 சதவீத ஆளவிற்கே முடிவைத் தந்தன. ஆனால் 80 சதவீதம் வரை துல்லிய முடிவுகள் கிடைத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த இயலும்” என்று தெரிவித்தனர்.
  • ஆனால் தங்கள் நாட்டு மருத்துவ கருவிகள் பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம்சாட்டுவதை சீனா மறுத்துள்ளது. இதுபற்றி சீனத் தூதரகத்தின் பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சீன நிறுவனங்களின் மருத்துவ கருவிகளை யாருக்கும் சரியாக கையாளத் தெரியவில்லை. எனவேதான் அவர்களுக்கு துல்லிய முடிவுகள் கிடைக்கவில்லை” என்று மறுத்துள்ளார்.
  • ஏற்றுமதி கொள்கையில் நாங்கள் ஒருபோதும் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதில்லை” எனவும், இனிமேல் தனது நாட்டின் மருத்துவ நிறுவனங்கள் மருத்துவ கருவிகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக தக்க தகுதிச் சான்றுகளை பெறவேண்டும்’ என்ற புதிய உத்தரவை சீன அரசு பிறப்பித்து உள்ளது.

Share it if you like it