கொளுத்தப்பட்ட கோவில் தேர், கிருஸ்தவ மிஷனரிகளின் கட்டுக்குள் ஆளும் அரசு…

கொளுத்தப்பட்ட கோவில் தேர், கிருஸ்தவ மிஷனரிகளின் கட்டுக்குள் ஆளும் அரசு…

Share it if you like it

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் 62 ஆண்டுகால பழமையான தேக்குமரத்தாலான கோவில் தேருக்கு சில மர்மநபர்கள் தீவைத்து எரித்துள்ளனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 நபர்களை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர், ஆனால் சில தினங்களில் கோவில் தேர் மின்கசிவின் காரணமாக தீ பிடித்திருக்கலாம் என மழுப்பலாக பதிலிலளித்துள்ளனர். இதனால் கோபமுற்ற ஹிந்து இயக்கத்தினர் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் ஆந்திர முதல்வரான ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் திருப்பதிக்கு கோவில் அமைந்துள்ள ஏழுமலையில் 1 மலையை தவிர மாற்ற மலைகளில் கிருஸ்தவ சர்ச்சுகளை அமைக்க உடந்தையாக இருந்ததாக குற்றச்சட்டுகள் எழுந்தது அதைத்தொடர்ந்து இப்பொழுதுள்ள அவரது மகனின் ஆட்சியில் திருப்பதி செல்லும் பேருந்து பயண சீட்டில் கிருஸ்தவ வாசகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தது, விழா ஒன்றில் விளக்கேற்ற ஜெகன்மோகன் ரெட்டி மறுத்தது போன்று தொடர்ந்து ஹிந்து விரோதப்போக்கையே ஆளும் கட்சி கடைபிடித்துவருவதாகவும் கிருஸ்தவ மிஷனரிகளின் கைப்பாவையாக ஆளும்கட்சி மாறியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றன.


Share it if you like it