கோவிலுக்கு பதிலா ஆஸ்பத்திரிக்கு செலவு பண்ண சொன்ன சந்திரமுகி எங்கே? 

கோவிலுக்கு பதிலா ஆஸ்பத்திரிக்கு செலவு பண்ண சொன்ன சந்திரமுகி எங்கே? 

Share it if you like it

பிரபல நடிகை ஜோதிகா அவர்கள் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் பொழுது இவ்வாறு கூறியிருந்தார்.

”தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் செல்ல முடியவில்லை. மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம்.

அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் மிகவும் மனம் வேதனை அடைந்தேன். கோவில் உண்டியலில் போடும் பணத்தை மருத்துவமனை மற்றும் பள்ளி ஆகியவற்றிற்கும் கொடுங்கள் என்று பேசினார். ஜோதிகாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல ஹிந்து தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அவர் பொதுவாக கருத்து தெரிவித்து இருந்தால் மக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்திருக்காது. கோவிலை பற்றி சொல்லும் போது தேவாலயம், மசூதிகளையும் சேர்த்து சொல்லியிருக்கலாமே. ஏன்? கோவிலை மட்டும் சொல்ல வேண்டும். நடிகர் சூர்யா குடும்பம் கோவிலை மட்டுமே தொடர்ந்து குறிப்பிட்டு தாக்குவது ஏன்? என்று பலர் கேள்வி வருகின்றனர்.

இந்நிலையில் 2007, 2008, 2009, நிதி ஆண்டுக்கான வருமான வரி ரூ.3.11 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நடிகர் சூர்யாவிற்கு அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. வருமான வரி மீதான வட்டியை செலுத்த தடை கோரி நடிகர் சூர்யா நீதிமன்றத்தை அணுகினார்., ஆனால் நீதிமன்றம் சூர்யாவின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கோவிலுக்கு பதிலாக ஆஸ்பத்திரிக்கு செலவு பண்ணலாம் என்று அறிவுரை கூறும் முன்பு முறையாக அரசுக்கு வரி செலுத்த நடிகர் குடும்பம் முன் வர வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it