ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன. ஆலய அர்ச்சகர்கள், கோவிலையே நம்பி வாழும் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் தற்பொழுது முடங்கியுள்ளன. இரவு, பகலாக, உழைக்கும் ஊழியர்களுக்கு தேவையான மளிகை சாமான்கள், மருத்துவ உபகரணங்கள், அரசு வழங்க வேண்டும், என்று மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்து அறநிலையத்துறையின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர்- டாக்டர் கிருஷ்ணசாமி தனது கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு இருக்கக்கூடிய 10 கோடி ரூபாயை இந்து அறநிலையத்துறைக்கே திருப்பி அளித்து பசியோடும் பட்டினியோடும் இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு அனைத்து கோயில்களிலும் உணவு சமைத்து வழங்க வேண்டும். என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் கிருஷ்ணசாமி.
இந்து முன்னணி உள்பட பல இந்து அமைப்புகள் கோவில் நிதியினை கட்டாயமாக இந்துக்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் கிருஷ்ணசாமியின் கோரிக்கை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து அறநிலையத்துறையின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு இருக்கக்கூடிய 10 கோடி ரூபாயை இந்து அறநிலையத்துறைக்கே திருப்பி அளித்து பசியோடும் பட்டினியோடும் இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு அனைத்து கோயில்களிலும் உணவு சமைத்து வழங்க வேண்டும்.
தலைவர் – டாக்டர் கிருஷ்ணசாமி pic.twitter.com/a0VwDzLIGn
— புதிய தமிழகம் கட்சி (@PTpartyOfficial) April 24, 2020
இந்து அறநிலையத் துறையின் சார்பாக முதலமைச்சர் நிவாரன நிதிக்கு வழங்கப்பட்ட 10 கோடி ரூபாயை இந்து அறநிலையத்துறைக்கு தமிழக முதல்வர் திரும்ப வழங்க வேண்டும்.
தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கு, தலைவர் – @DrKrishnasamy அவர்கள் கடிதம். pic.twitter.com/oULieXts12
— புதிய தமிழகம் கட்சி (@PTpartyOfficial) April 25, 2020