கோவில் மிக  சிறப்பு -கட்டியவர் புறக்கணிப்பு!

கோவில் மிக சிறப்பு -கட்டியவர் புறக்கணிப்பு!

Share it if you like it

  • தமிழகத்தில் சிறப்பும் பெருமையும் வாய்ந்த கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் முதல் இடத்தில இருப்பது தஞ்சாவூரில் உள்ள முதலாம் ராஜராஜ  சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ஆகும்.
  • தினமும் இக்கோவிலை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.இக்கோவிலின் சிறப்பை பற்றி சொன்னால் ஒரு நாழிகை போதாது.அந்த அளவுக்கு அந்த கோவிலின் சிற்ப கலைகள் உள்ளன.
  • இக்கோவில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது.1987 ஆம் ஆண்டு UNESCO நிறுவனமானது இக்கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
  • தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது.அப்போது சிவதொண்டு செய்யும் ஏழை மூதாட்டி ஒருவர் தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர் மோர் வழங்கி வந்தார்.இதனை அறிந்த மன்னர் அருண்மொழிவர்மன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வகையில் 80 டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று அந்த மூதாட்டியின் பெயரை செதுக்கி அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம்பெற செய்தார்.மேலும் அந்த கல்லின் நிழலே இறைவன் பெருவுடையார் மீது விழுகிறது.தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது என்பது மேலும் சிறப்பு.
  • இக்கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். 23 வருடங்களுக்கு பிறகு  நாளை தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.இதனால் அக்கோவில் இப்போது வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
  • தஞ்சை பெரிய கோவிலை பற்றி பெருமையாகவும் கர்வமாகவும் நினைக்கும் நாம் அக்கோவிலை கட்டிய முதலாம் ராஜராஜசோழனை நாம் மறந்துவிட்டோம்.இத்தகைய சிறப்புடைய கோவிலை கட்டிய மன்னருக்கு ஒரு மணிமண்டபம் கூட இல்லை என்பது வேதனைக்குரியது.கோவிலின் சிறப்பை பற்றி பேசும் நாம் அக்கோயிலை கட்டிய மன்னரான ராஜராஜசோழனையும் நினைவு கூர்வோம்.

Share it if you like it