சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… கிருஷ்ணகிரியில் பதற்றம்!

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… கிருஷ்ணகிரியில் பதற்றம்!

Share it if you like it

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாரம்பரியமாக நடைபெறும் எருது விடும் விழாவிற்கு தி.மு.க. அரசு தடை விதித்ததை கண்டித்து அம்மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கும் சம்பமவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு இதோ.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்களில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, எருது விடும் விழாவிற்கு, பொங்கல் தினம் தொடங்கி, பல வாரங்களாக அனுமதி கேட்டும், அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக அரசு.

அனுமதி கொடுப்பதும், மறுபடியும் தடை செய்வதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருப்பதால் ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், தற்போது, மீண்டும் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது போல தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாகத் தடை செய்வதே தி.மு.க.வின் நோக்கமாக இருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வரும் முன், எருது விடும் விழா தடை செய்யப்படாது என்று கூறிவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் தடை விதிக்க முற்படுகின்றனர்.

போராட்டம் நடத்தித்தான் காலாகாலமாக நடந்து வரும் விழாக்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற நிலைக்குப் பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்றும், எருது விடும் விழாவிற்கு, அனுமதி கோரிய அத்தனை கிராமங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை எச்சரிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக பொதுமக்கள் உட்பட பலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை to பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it