சமயத்தில் உதவிய இர்பான் பதான்…! கண் கலங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளி பாஸ்கரன்…!

சமயத்தில் உதவிய இர்பான் பதான்…! கண் கலங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளி பாஸ்கரன்…!

Share it if you like it

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்ட நாளில் இருந்து தன்னால் இயன்ற உதவிகளை விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், பல தொண்டு நிறுவனங்கள் தங்கலால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் உதவிகள் புரிந்த பல நல்ல உள்ளங்களின் முகம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வர துவங்கியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளி பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவு மட்டுமில்லாமல் ஜ.பி.எல். போட்டியும் தடை செய்யப்பட்டதால் வருமானம் இல்லாமல் நொடிந்து போன நிலையில் இருந்துள்ளார் பாஸ்கரன்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜ.பி.எல் போட்டி இடைவேளையின் போது முதன் முதலில் பாஸ்கரனை சந்தித்துள்ளார் இர்பான் பதான். திடீர் என்று ஒரு நாள் அத்தொழிலாளியின் நினைவு இர்பானுக்கு வரவே அவரின் தொலைபேசி எண் பெற்று தருமாறு முக்கிய நபரிடம் கேட்டுள்ளார்.

இர்பான் கேட்ட உதவியை அந்த நபர் மறந்து விட்டார். இதனை அடுத்து தீவிர முயற்சி மேற்கொண்டு எப்படியோ பாஸ்கரனிடம் பேசியுள்ளார். தற்பொழுதைய சூழ்நிலையில் தனது குடும்பத்தின் கஷ்ட நிலையை கூறியுள்ளார் அத்தொழிலாளி. அவருக்கு ஆறுதல் வார்த்தை கூறியதோடு, மட்டுமில்லாமல் அவரின் வங்கி, கணக்கில் 25,000 ரூபாய் பணமும் போட்டுள்ளார் இர்பான்.

பாஸ்கரனை பார்த்தது ஒரு முறை மட்டுமே அதுவும், ஜந்து ஆண்டுகள் கடந்தும் அவரின் நிலையை உணர்ந்து தக்க சமயத்தில் உதவி செய்த இர்பான் மனம் மிகவும் பெரியது என்பதை உணர்ந்து கொள்ள முடியும் என்பது திண்ணம்.


Share it if you like it