Share it if you like it
- கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட 3-வது ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனிடையே நேற்றிரவு (மே 12) 8 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி தனது பேச்சில் உலக அளவில் கரோனாவின் தாக்கம் குறித்தும், இந்தியாவில் கரோனா தாக்கம் குறித்தும் நீண்ட நேரம் பேசினார். அவர் உரையாடிக்கொண்டிருக்கும்போதே காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது சமூக வலைதளப் பதிவில், “அய்யோ.. பாயிண்டுக்கு வாங்க சாமி. சமைக்கணும். “வெறும் காத்துதான் வருது” இவ்வாறு பிரதமர் மோடியை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவுகளை பதிவிட்டு கொண்டே இருந்தார்.
- குஷ்புவின் இந்தக் கிண்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பதிவில் “முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும். நான் 4 ஆண்டுகள் தான் ம.பி.யில் இருந்தேன். இந்தியை இந்தியில்தான் எழுதுகிறேன். பிரதமர் சுயசார்பு பற்றிப் பேசியுள்ளது தங்கள் கட்சித் தலைவரை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்த உங்களுக்கு வீணாகத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை” என்று கூறினார்.
- எச்.ராஜாவின் பதிலுக்கு குஷ்பு, ”ஏன் உங்களுக்கு எரியுது? நான் எங்குமே பிரதமர் பெயரைச் சொன்னேனா.. சில் பண்ணுங்கள். வெயில் அதிகமாக இருக்கு. தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். அதை உங்களிடம் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
Yen ungallukku yeriyudhu?? Naa yengume pradhamar per sonne na?? Oh!! Since u know Hindi, “chor ki daadi mein tinka” ??? Go chill .. veyil adhigama irukku.. 👍🏻🙏🏻🤪🤪🤪🤪🤪🤪 n Tamizh yezhdhu padikka theriyum. adhukku I don’t have to prove myself to someone like u..Chalo vanakkam https://t.co/SQrGusQgRR
— KhushbuSundar (@khushsundar) May 12, 2020
- கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது, நோய் தொற்றிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம் என்பதை பற்றி மக்கள் தெளிவாக தெரிந்துகொள்வதற்காத்தான் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்.
- ஒரு பிரதமரே நாட்டு நலனுக்காக மக்களிடையே நீண்ட நேரம் நின்றுகொண்டே உரையாற்றுகிறார். ஆனால், குஷ்பு பிரதமர் என்றும் பாராமல் தரக்குறைவாக விமர்சித்துள்ளார். நாட்டின் நலனுக்காக பாரத பிரதமர் மோடி பேசுவதையே பொறுமையாக உங்களால் கேட்க முடியவில்லை என்றால், நாளை ஏழை எளிய மக்கள் குஷ்புவிடம் வந்து அவர்களின் கோரிக்கைகளை சொன்னால் கேட்பாரா ? இல்லை விரட்டியடிப்பாரா என்று நெட்டிசன்கள் குஷ்புவுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
Share it if you like it