சாத்தான்குளம் அதிர்ச்சிப் பின்னணி – சேவாபாரதி மீது அவதூறு பரப்பிய கிருஸ்தவ மீடியா, சட்டரீதியாக களமிறங்கும் சேவாபாரதி.

சாத்தான்குளம் அதிர்ச்சிப் பின்னணி – சேவாபாரதி மீது அவதூறு பரப்பிய கிருஸ்தவ மீடியா, சட்டரீதியாக களமிறங்கும் சேவாபாரதி.

Share it if you like it

டந்த சில தினங்களுக்கு முன்னதாக சாத்தான்குளம் பகுதியில் தந்தை, மகன் இருவரும் காவல்நிலையத்தில் இறந்ததை தொடர்ந்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இவ்விவகாரத்தில் சம்மந்தமே இல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு சேவை பணியினை செய்து வரும் சேவா பாரதி அமைப்பினை தொடர்புபடுத்தி சில சமூக விரோத சக்திகள் சமூக வலைதளத்தில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.
blank

இதற்கு எதிர்வினையாக சேவாபாரதி சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது அதன் ஒரு பகுதியாக CJ.ஜெபா எனும் நபர் தனது முகநூல் கிறிஸ்தவ மீடியா என்ற பக்கத்தில், கொலைகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்பினைச் சார்ந்தவர்கள் தான் என மதவெறிப் பிரச்சாரம் செய்துவந்தார். இது குறித்து, இரு சமூகங்களுக்கு இடையே மதக்கலவரம் ஏற்படுத்தும் விதமாகவும், சேவா பாரதி, ஆர்.எஸ்.எஸ் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும் பதிவிட்டதற்காக இவர் மீது, கோவில்பட்டி நகர ஆர்.எஸ்.எஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எந்த அடிப்படையும் இல்லாமல், பிரிவினை நோக்கில் மதப் பிரச்சினையாக திசை திருப்பி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது அவதூறு பரப்புவதே நோக்கமாய் ” முகநூல் கிறிஸ்தவ மீடியா” பக்கத்தின் வாயிலாக பொய் பிரச்சாரம் செய்து வரும், அட்மின் CJ Zeba என்பவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில், உண்மைக்கு புறம்பாக, தனிநபர்கள் மீதும், அமைப்புகள் மீதும் அவதூறு பரப்பும் இது போன்ற நபர்களால், சமூக நல்லிணக்கம் நிச்சயம் கேள்விக்குள்ளாகிறது. உள்நோக்கோடு செயல்படும் இது போன்ற நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் பார்வையாக உள்ளது.


Share it if you like it