சீனாவின் அடாடவடி தனத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து தற்பொழுது கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்தியா உட்பட பல நாடுகளுடன் சீனா எல்லை பகுதியில் பிரச்சனை செய்து வருகிறது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் எங்கள் பகுதி உள்ளது என்று சீனா அண்மையில் அலறியது. வரலாற்று ரீதியில் அது எங்கள் பகுதி என்று ரஷ்யா பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் மியான்மர் அரசு சீனாவிற்கு எதிராக பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
அரக்கன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி (ARSA) என்கிற பயங்கரவாத குழுக்களுக்கு சீனா ஆயுதம் மற்றும் பணம் வழங்கி, மியான்மர் நாட்டிற்கு எதிராக செயல்படுமாறு தூண்டி வருகிறது என்று அந்நாடு சீனாவின் மீது குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவின் கொட்டத்தை அடக்கியும், தங்கள் நாட்டிற்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருப்பது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.