Share it if you like it
கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் ஆற்றின் மீது 60 மீட்டர் நீளமுள்ள பாலத்தை இந்திய ராணுவம் கட்டி முடித்துள்ளது. இதன் மூலம் எளிதில் தரைப்படை ராணுவ வீரர்கள் ஆற்றின் குறுக்கே நகர்ந்து செல்ல முடியும். இந்திய ராணுவத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தையே சீனா கட்ட கூடாது என தொடர்ந்து இந்தியாவை மிரட்டி வந்தது.
255 கி.மீ தூரம் உள்ள முக்கிய சாலைகளை இணைக்க இப்பாலம் மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் அச்சுறுத்தலையும் மீறி லடாக்கில் இப்பாலத்தை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ள இந்திய ராணுவத்திற்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it