சீன நாட்டை சேர்ந்தவரான பிரபல எழுத்தாளர் கார்டன் ஜி. சாங் தற்பொழுது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு தனது கருத்தினை தெரிவித்து இருந்தார்.
”சீனா தற்பொழுது கடும் துன்பத்தில் உள்ளது., அதன் பொருளாதாரம் இன்னும் மோசமாகி கொண்டே போகிறது. பல உள்நாட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே உள்ளன. அந்நாடு மிக பலவீனமாக உள்ளது. சீனாவில் உண்மையான அறிகுறிகளை என்னால் உணரமுடிகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு பகீர் தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் உள்ள 50 மாநிலங்களுக்கு சீன அரசு மர்ம விதைகளை அனுப்பியுள்ளது. பெய்ஜிங் அமெரிக்காவிற்கு எதிராக தொடர்ந்து “கட்டுப்பாடற்ற போர்” கொள்கையை கடைபிடித்து வருகிறது. இந்த விதைகள் சுற்றுச்சூழலை அழிக்கக்கூடும். இது சீன உயிரியல் தாக்குதலாக இருக்க முடியுமா? என்று அவர் கூறியிருப்பது உலக நாடுகள் மத்தியில் மீண்டும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
#China has sent mysterious seeds to all 50 states. Beijing maintains a policy of "unrestricted warfare" against the #US, and the seeds may cause disease and ruin the environment. Could this be a Chinese biological attack? See: https://t.co/2kQgBb8c54 @GatestoneInst
— Gordon G. Chang (@GordonGChang) July 30, 2020