சீனாவிற்கு உதவி கரம் நீட்டிய- இந்தியா!

சீனாவிற்கு உதவி கரம் நீட்டிய- இந்தியா!

Share it if you like it

உலக நாடுகளை காற்றின் மூலம் அச்சுறுத்தி வரும்  கரோனா வைரஸ் கிருமி இதுவரை சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் தங்கள் இன்னுயிரையும்  நாற்பது  ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெறும் நிலையில் கரோனா  வைரஸ் கிருமி தள்ளியுள்ளது.

இதனை அடுத்து ஜப்பான், அமெரிக்கா, மற்றும் ஜரோப்பிய நாடுகள் அந்நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளன. இந்நிலையில் பாரத பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன அதிபர் ஜின் பிங்க்கு கடிதம் எழுதியிருந்தார். அதில்  தங்கள் நாட்டிற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களை  வழங்க  இந்தியா தயாராக உள்ளது என்று கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில்  அந்நாட்டிற்கு தேவையான முகக் கவசங்கள், கையுறை, மருத்துவ பொருட்கள் அனைத்தையும் ஏற்றுமதி செய்ய தயாரக உள்ளோம்  என சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி  கூறியிருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it