Share it if you like it
தலாய் லாமாவை விரட்டி விட்டு திபெத்தை ஆக்கிரமித்து கொண்டது சீன கம்யூனிஸ்ட் அரசு. அன்றிலிருந்து இன்று வரை அவர் தனது நாட்டிற்கு செல்ல முடியாமல். இந்தியாவிலேயே வாழும் சூழ்நிலை நிலவுகிறது. எங்கள் நாட்டை ஒப்படைத்து விடுங்கள் என்ற தலாய் லாமாவின் கருத்திற்கு இன்று வரை சீனா செவி மடுக்கவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பல்வேறு நெருக்கடிகளை சீன அரசு அவருக்கு கொடுத்து வருகிறது.
சீனாவின் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்து விடுதலை கேட்கும் நாடுகளில் தைவானும் ஒன்று. தற்பொழுதைய சூழ்நிலையில் புத்த மதகுரு தலாய் லாமா தனது நாட்டிற்கு மீண்டும் வருமாறு தைவான் அழைப்பு விடுத்திருப்பது. சீனா மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திபெத் பிரச்சனையை ஒரு சர்வதேச விவாத பொருளாக மாற்றவும். சீன கம்யூனிஸ்ட் ஆட்சியில் திபெத் மக்களின் துயரங்களை உலகிற்கு உணர்த்தவும் இது தான் சரியான சந்தர்ப்பம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திபெத் புத்த மதத்தை சீனா அடக்குவது ஒரு வகையான இனப்படுகொலை என்பதை யாரும் மறந்து விட முடியாது.
Share it if you like it