பிரபல எழுத்தாளரும் தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருபவருமான கார்டன் ஜி. சாங் அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு கூறி இருந்தார்.
சீனா தற்பொழுது கடும் துன்பத்தில் உள்ளது., அதன் பொருளாதாரம் இன்னும் மோசமாகி கொண்டே போகிறது. பல உள்நாட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே உள்ளன. அந்நாடு மிக பலவீனமாக உள்ளது. சீனாவில் உண்மையான அறிகுறிகளை எங்களால் உணரமுடிகிறது என்று ஜி. சாங் கூறியிருந்தார்.
சீன ராணுவ வீரர்களின் உடல்களை கூட பெற்றோர்களை பார்க்க அனுமதிக்காமல் வெறும் அஸ்தியை மட்டுமே அண்மையில் வீட்டிற்கு சீன அரசு அனுப்பியது இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் சீனாவின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து குரல் எழுப்பிய பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மீது சீன காவல்துறை தனது கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருப்பது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1277940278603612160