இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து வன்முறை போக்கையே மேற்கொண்டு வரும் சீனா, பாகிஸ்தானுக்கு, எதிராக இன்று வரை கண்டன அறிக்கையோ, எதிர்ப்போ இன்று வரை திருமாவளவன் கூறியது இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் என்பதையும் மறந்து மோடி மீதுள்ள வன்மத்தால், உண்மை தன்மையை கூட அறியாமல் அண்மையில் இந்திய ராணுவத்தை பற்றிய போலி புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது ஒட்டு மொத்த இந்திய ராணுவத்தின் வீரத்தை இழிவுப்படுத்தும் செயல் என்று நெட்டிசன்கள் வறுத்து எடுத்தனர்.
இந்நிலையில் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமா இவ்வாறு கூறியுள்ளார்.
லடாக் பகுதியில் பதற்றம். இந்திய சீன எல்லையில் மோதல். இந்திய படையினர் மூவர்பலி. தமிழகத்தைச் சார்ந்த திருவாடானை- கடுக்கலூர் பழநியும் வீரச்சாவு. கொரோனா நெருக்கடியில் போர் தவிர்க்கப்பட வேண்டும்.
அத்துமீறி செயல்படும் சீனாவிற்கு கண்டனம் இல்லை, இந்திய அரசும் போர் என்றும் கூறவில்லை. அர்தமற்ற முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்மாதிரியான கருத்துக்களை வெளியிட்டு வருவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை உணரவில்லையா? என்று மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
#Ladakh பகுதியில் பதற்றம். இந்திய சீன எல்லையில் மோதல். இந்திய படையினர் மூவர்பலி. தமிழகத்தைச் சார்ந்த திருவாடானை- கடுக்கலூர் பழநியும் வீரச்சாவு. கொரோனா நெருக்கடியில் போர் தவிர்க்கப்பட வேண்டும்.#IndiaChinaBorder #IndiaChinaFaceOff #IndianArmy pic.twitter.com/pADC2u008D
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 16, 2020
திருமா ட்வீட் பண்ண வீடியோ உண்மை தான், அதில் என்ன சந்தேகம்