கொரோனா என்னும் கொடிய அரக்கனை உலக நாடுகள் மீது ஏவி விட்ட நாடாக சீனா இருப்பதாக வல்லரசு நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட, மக்களின் உயிரை குடித்துள்ளது இக்கொடிய நோய். ஜெர்மனி அரசு எனது நாட்டில், ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கு, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க மருத்துவ குழு கொரோனா பரவ காரணமான சீனாவில் விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் உயிரிழப்பிற்கு காரணம் என்று சீனாவை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டிற்கு மேலும் கடும் நெருக்கடிகளை கொடுக்க டிரம்ப் அரசு மிக தீவிரமாக செயல்பட துவங்கியுள்ளது. சீனா மீது பொருளாதாரத் தடை விதித்தல், புதிய வர்த்தக கொள்கை உருவாக்குதல், போன்ற கடும் கட்டுபாடுகளை விதிக்க டிரம்ப் அதிரடி திட்டங்களை வகுக்க உள்ளதாக அந்நாட்டு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
LIVE: POTUS Delivers Remarks on Protecting America's Seniors https://t.co/CCZrEZ9XxH
— The White House 45 Archived (@WhiteHouse45) April 30, 2020