சீனாவிற்கு வீழ்ச்சி, இந்தியாவிற்கு வளர்ச்சி, அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வல்லரசு நாடான அமெரிக்காவே தனது மக்களின் நிலை குறித்து அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் சீனா தான் இதற்கு முழு காரணன் என்று தனது விரலை நீட்ட துவங்கி விட்டது.
ஜெர்மன் அரசு, சீனாவிடம் நஷ்ட ஈடு கேட்ட செய்தி அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சீனா ஏற்றுமதி செய்த மருத்துவ உபகரணங்கள் தரமற்றவை என்று கூறி அந்நாட்டிற்கே உலக நாடுகள் திருப்பி அனுப்பி வருகின்றன. ஜின் பிங் செய்த தவறே இதற்கு, காரணம் என்று மக்களின் தொடர், குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
உலக நாடுகள் சீனாவிடம், வர்த்தகம் செய்ய விரும்பாத, சூழ்நிலை உருவாகியுள்ளது. பொருளாதார ரிதியாக, வல்லரசு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது 5 டிரிலியன் டாலர் பொருளாதார கனவை அடைய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான், அமெரிக்கா, மற்றும் முதலீடுகள் செய்த நாடுகள் சீனாவிடம் செய்த ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு. இந்தியா பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளது என்றும். நோய் தொற்றை உலக, நாடுகளிடம் இருந்து சீனா மறைத்ததே இதற்கு காரணம், என்று அரசியல் நோக்கர்களின், கருத்தாக உள்ளது.