லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலின் போது நேற்று இரவு ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் இந்த அத்துமீறலுக்கும், திட்டமிட்டே வன்முறையில் இறங்கிய சீன ராணுவத்தின் அடாவடி தனத்தை கண்டித்தும் நாடு முழுவதிலும் இருந்து தற்பொழுது சீனாவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 450 வகையான பொருட்களை புறக்கணிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய ராணுவத்தையும், பாரதப் பிரதமர் மோடியையும், அண்மையில் மிக கடுமையாக விமர்சித்து இருந்தார் பாகிஸ்தான் முன்னாள் கிரிகெட் வீரர் ஷாஹித் அப்ரிடி. இதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது மட்டுமில்லாமல் தேவைபட்டால் ஆயும் ஏந்தி எனது நாட்டிற்காக எல்லை வந்து சண்டையிடுவேன் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் சீனாவின் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்குமாறு தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ban all Chinese products #BoycottChineseProducts https://t.co/nzaNc3DyoE
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 16, 2020