சீன ராணுவ வீரர்கள் ஜின்பிங் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர் மூத்த தலைவர் எச்சரிக்கை….!
நாட்டிற்காக வீரமரணம் அடைந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதையை மத்திய, மாநில அரசுகள், சிறப்பாக செய்தது. பல்வேறு நாடுகள் இந்திய அரசிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டது.
இன்று வரை சீன அரசு தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் மரணத்தை உலக நாடுகள் மட்டுமில்லாமல், சீன மக்களிடமும் மறைத்து விட்டது. இறந்த வீரர்களின் அஸ்தியை மட்டுமே வீட்டிற்கு அனுப்பி வைத்து அவர்களின் தியாகத்தை அவமதித்தது.
இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு முன்னாள் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜியான்லி யாங் பேட்டி அளிக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
இறந்து போன சீன ராணுவ வீரர்களின் உயிர் இழப்பை அரசு மறைப்பது அவமானகரமான செயல். சீன ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் உணர்வுகள் புண்பட்டால் லட்சக்கணக்கான வீரர்கள் ஒன்றிணைந்து சீன அரசிற்கு எதிராக வலிமை மிக்க சக்தியாக மாற கூடும் என்று ஜின்பிங் அரசிற்கு எச்சரிக்கை விடுத்து இருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.