இறந்தவன் எந்த ஜாதி, மதம், இனம், என்று பார்த்த பிறகே சுப.வீரபாண்டியன், அருணன், வீரமணி, போன்றவர்கள் தங்களின் வாயை அகலமாக திறப்பார்கள். ஜாதி, மதம், பார்த்து சீட்டு வழங்கும், திமுகவை இவர்கள் எதிர்க்க மாட்டார்கள். இந்த சில்லறை போராளிகள், என்று மக்களின் தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
அண்மையில் தினத்தந்தியில் கொரோனாவை முன்வைத்து ஒரு கார்ட்டூன் வெளிவந்தது. அதற்கு சுப.வீரபாண்டியன் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.
படம் வரைகிறது ஒரு பார்ப்பனப் பாம்பு!
தன்மானமுள்ள தமிழர்கள் எல்லோருக்கும் தெரியும். கோடித் தமிழரின் நெஞ்சில் குடி கொண்டிருப்பவர் அண்ணா. அவரை இழிவுபடுத்த எந்த நாய்க்கும் உரிமையில்லை. படம் வரைந்தவனே, மன்னிப்பு கேள். இல்லையேல், காலம் உன்னைச் செருப்பால் அடிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பா.ஐ.க மூத்த தலைவர்களில் ஒருவரான நாராயணன் திருப்பதி இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி, வலம்வரும் சுப.வீ அவர்களே,மதி அவர்கள் எந்த சமூகத்தை சார்ந்தவர் என்று தெரியாமலேயே
சாடியுள்ள சுப.வீ அவர்களே, மதியின் சாதியின் பெயரை சொல்லி சாடவோ அல்லது அந்த கார்ட்டூன் வெளிவந்த பத்திரிகையின் சாதியை சொல்லி சாடவோ உங்களுக்கு தைரியம் உள்ளதா? பயம் தானே? சுப வீ யின் மொழியிலேயே கூறவேண்டுமென்றால் எந்த சாதியையும் சொல்லி சாடுவதற்கு ‘எந்த நாய்க்கும் உரிமையில்லை. என்று இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.