தீபாவளி நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை நகரில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணிக்கின்றனர். சென்னையின் சூழலை கருத்தில் கொண்டு சிலர் முன்கூட்டியே மூட்டை கட்டிய நிலையில், பணி நிமித்தம், பொருளாதார சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இறுதி நேர பயணத்தையே சென்னை நகர மக்கள் பண்டிகையின் போது மேற்கொள்கின்றனர். அந்த வகையில் நேற்று ஏராளமான சொந்த ஊருக்கு பயணித்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் டோல்கட்டில் சிக்கிக் கொண்டனர்.போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை நகரமே நேற்று ஸ்தம்பித்தது.பிழைப்பு என்ற ஒரே காரணத்தால் தங்கள் சொந்த ஊர்களை விட்டு சென்னைக்கு வரும் மக்கள், விட்டால் போதும் என கருதி பண்டிகை காலத்தின் போது ஊர்களுக்கு திரும்ப செல்கின்றனர். சுற்றுச்சூழல் மாசு, வாகனங்கள் கக்கும் கார்பன் புகை, மோசமான சாலைகள், திட்டமிடாத உட்கட் அமைப்புப் பணிகள், தனியார் பேருந்து, விமானங்கள் போன்றவற்றில் கட்டணம் பன் மடங்கு உயர்வு என சென்னை மக்கள் படாத அவஸ்தை படுகின்றன… போதாத குறைக்கு மாலை நேரத்தில் பெய்த மழையால் ஆங்காங்கே வாகனங்கள் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது மக்கள்பெரும் சிறப்புமத்திற்கு ஆளாயினர். ‘பிழைப்னு ஒன்னு இல்லனா, சென்னைகே வரமாட்டோம்’ என என்பதே சென்னை வாசிகளின் தற்போதைய மைண்ட் வாய்ஸ் ஆக உள்ளது.