சென்னையில் போராட்டங்கள் நடத்த தடை- கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவு!

சென்னையில் போராட்டங்கள் நடத்த தடை- கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவு!

Share it if you like it

தமிழகத்தில்  திமுக , கம்யூனிஸ்ட், மற்றும்  சில  அடிப்பொடி இயக்கங்கள் என்று  தினம்தோறும் ஏதேனும் ஒரு பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தெருக்கள், சாலைகள், பொது இடங்களை ஆக்கிரமித்து  மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள்,  ஆம்புலன்ஸ்  என எதற்கும் வழிவிடாமல்  பலரும்  கடும் இன்னல்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்  அதிக போராட்டம் நடப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.  இதனை கருத்தில் கொண்டு காவல்துறை சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, இதன் அடிப்படையில் போராட்டங்கள் நடத்த 5 நாட்களுக்கு முன்பே  காவல்துறையினரிடம் அனுமதி பெற்றிருக்க  வேண்டும்.

உண்ணாவிரதம், மனித சங்கலி, ஊர்வலம்  என அடுத்த 15 நாட்களுக்கு இனி எந்த போராட்டத்திற்கும் அனுமதி அளிக்க கூடாது என தான் உத்தரவிட்டுள்ளதாகவும். இருப்பினும் சவ ஊர்வலம்,  திருமண ஊர்வலம், மத ஊர்வலத்திற்கு தடையில்லை என்று  கமிஷனர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


Share it if you like it