சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து வழக்கறிஞர்களின் ஒற்றுமையை கண்டு நடுங்கிய எதிர் தரப்பினர்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து வழக்கறிஞர்களின் ஒற்றுமையை கண்டு நடுங்கிய எதிர் தரப்பினர்!

Share it if you like it

ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளையும், தேவைகளையும் பெற்று தருவதற்கு சரியான ஒரு இயக்கமாக இந்து முன்னணி உள்ளது. எங்கு ஹிந்துக்கள் அச்சுறுத்தப்படுகிறார்களோ, அல்லது துன்படுகிறார்களோ, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியையும், முனைப்புடன் வழங்க இந்து முன்னணி தானகவே முன் வருகிறார்கள் மேலும் ராம கோபாலன் ஹிந்துக்களின் ஒற்றுமையே பலம், பாதுகாப்பு, பிரிந்து இருப்பதே பலவீனம், ஆபத்து, என்று அடிக்கடி கூறுவார். என மக்களின்  கருத்தாக இருந்து வருகிறது.

முன்பெல்லாம் நீதிமன்றத்தில் மக்கள் சார்ந்த ஒரு வழக்கினை இந்து முன்னணி கொண்டுவந்தால். எதிர் தரப்பினர் தங்கள் வழக்கறிஞர் பலத்தின் மூலம் வழக்கின் போக்கையே மாற்றும் வகையில் செயல்படுவர். மேலும்  குழப்பம்  விளைவிக்கும் வகையில் மாற்று கட்சியை, சார்ந்த வழக்கறிஞர்கள் செயல்படுவர்.

ஆனால் இம்முறை 200 இந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கூடினார்கள். வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் உழைப்பிற்கும், தியாகத்திற்கும் இன்று மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. குடியுரிமை எதிர்ப்பு போராட்டகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்ய பட்ட மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தன.

இது போன்ற நேரங்களில் கம்யூனிஸ்ட்டு வழக்கறிஞர்களே அதிக அளவில் நீதி மன்றத்தில், கூடி கூச்சல்-குழப்பங்கள் ஏற்படுத்தி வழக்கை திசை திருப்புவார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். ஆனால், இன்று,. இந்து வழக்கறிஞர்கள், சுமார் 200 பேர் வரை கூடியிருக்க கம்யூனிஸ்ட்டு வழக்கறிஞர்களின் தந்திரங்கள் எடுபடாமலே போனது. இந்து சமுதாய ஒற்றுமை இன்று போலவே அனைத்து செயல்களிலும் என்றும் தொடர இறைவனை வேண்டி கொள்வோம் என்று அவர்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் கூறப்பட்டுள்ளது.


Share it if you like it