சேலத்தில் கொரோனா தடுப்புக்காக பொதுமக்களுக்கு கபசுர மருத்துவ நீரை வழங்கிய விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் !

சேலத்தில் கொரோனா தடுப்புக்காக பொதுமக்களுக்கு கபசுர மருத்துவ நீரை வழங்கிய விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் !

Share it if you like it

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் புத்தூர் அக்ரஹாரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த சுவாமி விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் கொரோனா தடுப்புக்காக
கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கபசுர சித்த மருத்துவ நீர் பொதுமக்களுக்கு வழங்கும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

1 நாள் (புத்தூர் அக்ரஹாரம் ஊராட்சி)
300 நபர்களுக்கு

2 நாள் (நெய்க்காரப்பட்டி ஊராட்சி)
350 நபர்களுக்கு

3 நாள் (கணவாய்காடு ஊராட்சி)
300 நபர்களுக்கு மேல்

4 நாள் (மேலே கூறிய மூன்று ஊராட்சிகளில் எஞ்சியுள்ள ஒரு முனியப்பன் கோவில், காடு சக்தி கோவில், ஐந்து முனியப்பன் கோவில், இரட்டை கிணறு போன்ற சிறு கிராமங்கள் பகுதிகள்)
400 நபர்களுக்கு மேல்

கடந்த நான்கு நாட்களுக்குள் மட்டும் கிட்டத்தட்ட 1300 நபர்களுக்கு மேல் கபசுர சித்த மருத்துவ நீர் வழங்கியுள்ளனர்.

மேலும் 200 மரக்கன்றுகள் கிராமத்தில் நட்டு அதை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் அன்று சேலம் மாவட்டம் சிவராம் அவர்களின் ரத்த வங்கியுடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தியுள்ளனர்.

தற்போது ஆர்எஸ்எஸ் மூலம் வழங்கப்படும் இலவச நிவாரண பொருட்களை வீரபாண்டி பகுதியில் ஒரு சில இடங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


Share it if you like it