திமுக நிர்வாகிகள் அப்பாவி பெண்களை பியூட்டி பார்லர் சென்று கடுமையாக தாக்குவது. தன்னிடம் தவறாக நடந்து கொண்ட திமுக உறுப்பினர் பற்றி மேலிடத்தில் புகார் தெரிவித்தால், அப்பெண்னை கட்சியை விட்டே நீக்குவது. பாதிக்கப்பட்ட பெண் நீதி வேண்டி போராடுவது, என திமுக மீது அன்றாடம் ஏதேனும், புகார்கள் வருவதை பத்திரிக்கைகள், ஊடகங்கள், தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு கொண்டே இருக்கின்றன.
இந்திய அரசியல் வரலாற்றில் அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாத பெயருக்கு சொந்தக்காரர் செல்வி ஜெ.ஜெயலலிதா என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா பற்றி மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்து புகைப்படம் வெளியிட்டு இருப்பது. தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1262720963306639361