டெல்லியில் திரைப்பட விருதுகள் விழா.!

டெல்லியில் திரைப்பட விருதுகள் விழா.!

Share it if you like it

தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று டெல்லியில் நடைபெறுகிறது. துணை குடியசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்குகிறார். ஒவ்வொரு ஆண்டும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையானது திரைத் துறையில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கி வருகின்றது. இன்று நடைபெறும் விருது விழாவில் வெங்கய்யா நாயுடுவுடன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்கிறார். அந்ததூன் திரைப்படத்திற்காக ஆயுஷ்மான் குரானாவுக்கு சிறந்த நடிகர்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதாசாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் விருது விழாவில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it