தகவல் பாதுகாப்புசட்டம் கூறுவது என்ன?

தகவல் பாதுகாப்புசட்டம் கூறுவது என்ன?

Share it if you like it

மத்திய அமைச்சகத்தால் தகவல் பாதுகாப்பு சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அநேகமாக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் தகவல் பாதுகாப்பு சட்டம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய நாளில் அனைவரின் தனிப்பட்ட விவரங்களும் தகவல்களாகவே சேகரிக்கப்பட்டுள்ளன. சமீபகாலங்களில் தனிநபர்களின் தகவல்கள் திருடப்படுவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டு எழுந்தபடியே உள்ளன. அதிலும் குறிப்பாக சமூகவலைத்தளங்கள் நமது தகவல்களை விற்பது, பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிக்காவிற்கு பகிர்ந்தது மூலம் தெரிந்தது. இந்நிலையில் பல்வேறு நாடுகள் தகவல் பாதுகாப்பில் கவனம் செலுத்த தொடங்கின.

ஐரோப்பிய யூனியானது தகவல் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது. அதனையொத்து மத்திய அரசானது கடந்த ஆண்டு தனிச்சட்டம் இயற்றியது. தற்போது அதனை மேலும் திருத்தி தகவல் பாதுகாப்பு சட்டம் 2019 தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் தனிநபர்களின் தகவல்களாக மருத்துவம், நிதி, பாலியல், உயிரியல் தகவல்கள் மற்றும் ஜெனெடிக் தகவல்கள் ஆகியவை இந்தியாவிலே சேமிக்கவேண்டும். மேலும் அரசு கேட்கும்போது தகவல்களை அளிக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் பாதுகாப்புசட்டம்  கூறுவது என்ன?

இவ்வளவு காலம் பேஸ்புக், கூகிள் போன்ற நிறுவனங்கள் பயனர்களின் தகவல்களை அயல்நாடுகளில் சேமித்து வந்தது. அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் சேமிப்பதன் மூலம் செலவை குறைக்கலாம் என நிறுவங்கள் நினைக்கின்றன. அதனால் இந்த புதிய சட்டத்தை எந்த அளவிற்கு பன்னாட்டு நிறுவங்கள் ஏற்கும் என்பது இனிமேல் தான் தெரியவரும் ஏற்கனவே பல நிறுவனங்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


Share it if you like it