சமீபத்தில் டெல்லியில் தப்லீகி ஜமாத் என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மாநாடு டெல்லியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி நடந்தது. அதில் பல நாட்டை சேர்ந்த பல ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் இருந்தும் சிலர் கலந்துகொண்டனர். பின் அவர்கள் தமிழ்நாடு திரும்பியதும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த செய்தியை தந்தி சேனல் ஒளிபரப்பும்போது முஸ்லிம்களின் புகைப்படத்தை
வைக்காமல் சம்மந்தமில்லாமல் ஐயங்கார் ஒருவரின் புகைப்படத்தை வைத்து அந்த செய்தியை ஒளிபரப்பியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஒருவர் மும்பையிலிருந்து தந்தி சேனல் நிர்வாகத்திற்கு போனில் அழைத்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்த தந்தி சேனல் நிறுவனர் சரியான காரணத்தை சொல்லாமல் மழுப்பியுள்ளார். அந்த ஆடியோ காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.