தனிமை மற்றும் தூய்மையாக இருங்கள் –  கொரோனா பரவுவதை தவிருங்கள் !

தனிமை மற்றும் தூய்மையாக இருங்கள் – கொரோனா பரவுவதை தவிருங்கள் !

Share it if you like it

  • தற்பொழுதைய சூழலில் தமிழகத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகின்றது என்கிற விஷயமானது பல செய்தி ஊடகங்கள் பரப்பி கொண்டு வருகிறது.
  • கடந்த மார்ச் 14, 2020 அன்று தமிழகத்தில் ஒரு நபருக்கு கொரோனா இருப்பது கண்டறியபட்டது. அடுத்த 15 நாட்களில் நடத்தபட்ட சோதனைகளில் மார்ச் 31, 2020 அன்று 124 நபர்களுக்கு இருப்பதாக கண்டறியபட்டது. அதவாது 10 நபர்கள் மூலம் 13 நபர்களுக்கு பரவும் என்ற விகிதாசாரத்தில் இருந்தது.
  • ஏப்ரல் மாதத்தின் கடைசியில் 2323 வரை கண்டறியபட்டது. இது 10 நபரிலிருந்து 11 நபர் வரை பரவும் விகிதாசாரத்தில் இருந்தது. மே முதல் 8 நாட்களில் 10 நபர்கள் மூலம் 13 நபர்கள் என்ற விகிதாசராத்திலேயே இருக்கிறது. இந்த விகிதாசரம்படி பார்த்தால் மே மாத இறுதியில் தமிழகத்தில் 1.5 இலட்சம் வரை கொரானா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
  • அதேபோல் சென்னையில் மார்ச் மாதத்தில் 10 நபர்கள் மூலம் 13 பேருக்கும், ஏப்ரல் மாதத்தில் 10 பேர் மூலம் 11 நபர்களுக்கும், மே முதல் 8 நாட்களில் ஏப்ரல் மாத விகிதாசாரமே இருக்கிறது. அதன்படி பார்த்தால் சென்னையில் 80 ஆயிரம் நபர்கள் வரை பரவ வாய்ப்பு இருக்கிறது.
  • இதில் நல்ல விஷயம் என்னவென்றால் மே 4 முதல் 8 வரை புதியதாக ஒருவருக்கும் கண்டறியபடவில்லை. கண்டறியபட்ட அனைவரும் தொடர்பில் இருந்தவர்களே. ஆகவே நம்மை நாமே தனிமைபடுத்திக் கொள்வதன் மூலம், சுத்தமாக வைத்து கொள்வதன் மூலம் அதிகமான பரவுதலை தடுக்க முடியும்.

Share it if you like it