தன்னார்வலர்கள், சமூக நல அமைப்புகள் ஏழைகளுக்கு உணவு வழங்கலாம் – உயர்நீதிமன்றம் !

தன்னார்வலர்கள், சமூக நல அமைப்புகள் ஏழைகளுக்கு உணவு வழங்கலாம் – உயர்நீதிமன்றம் !

Share it if you like it

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏழை, எளிய மக்கள் வேலையின்றி, உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதுபோன்ற ஏழை எளிய பல தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும், பல அமைப்புகளும் உணவளித்து உதவி செய்து வந்தனர். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தன்னார்வலர்கள் நேரடியாக மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கக் கூடாது என்று அரசு தடை விதித்தது.
இந்நிலையில் ‘ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை. அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால் மட்டும் போதும். மக்களுக்கு உதவி செய்பவர்கள் நேரடியாக சென்று உணவுப் பொருட்களை வழங்கலாம். அதே நேரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்களிடம் உணவுப் பொருட்களை வழங்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும்’ என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


Share it if you like it