தன்னுயிரை துச்சமாக மதித்து பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவித்த மக்களை கீழ்தரமாக விமர்சித்துள்ள-அலூர் ஷனவாஷ்!

தன்னுயிரை துச்சமாக மதித்து பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவித்த மக்களை கீழ்தரமாக விமர்சித்துள்ள-அலூர் ஷனவாஷ்!

Share it if you like it

கொரோனா தொற்று சீனாவில் உருவாகி இன்று உலக நாடுகளையே கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஈரான், இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் உள்ள அப்பாவி மக்கள் அதிகம் உயிர் இழந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி ஊழியர்களின் சேவைக்கு அண்மையில் மக்கள் கைதட்டி, பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மேலும் தொற்று கிருமி, பரவாமல் இருக்க முதல்வர் பழனிச்சாமி.

செவிலியர்கள் பணியின் பொழுது

தமிழகம் முழுவதும் மார்ச் 31-ம்தேதி வரை 144 தடை உத்தரவை அறிவித்துள்ளார். இதனை அடுத்து பல்வேறு, கட்டுப்பாடுகளை அதிரடியாக அரசு, மேற்கொண்டு வருகிறது. 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூட வேண்டாம், என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய, மாநில அரசு, மக்கள் நலன் சார்ந்து எடுக்கும், முடிவுகளை சில பத்திரிக்கை, ஊடகம், அரசியல்வாதி, என்று சிலரின் போலி முகத்திரையை எளிதில் மக்கள் கண்டு பிடித்து விடுகின்றனர். இறந்தவன் எந்த ஜாதி, மதம், இனம், நமக்கு என்ன பங்கு, என்று பார்த்த பிறகே, தனது வாயை அகல பிளக்கும் கட்சிகள், தமிழகத்தில் அதிகம் உள்ளது என்று மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.

அண்மையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்களில் ஒருவரான அலூர் ஷனவாஷ் இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

4 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று ஊரடங்கு ஆணையிடும் அரசு தான் நூற்றுக்கணக்கானோர் ஓரிடத்தில் கூடும் நாடாளுமன்றம், சட்டமன்றத்தையும், +2 தேர்வையும் நடத்துகிறது. கூட்டமாகக் கூடி கைதட்டி, மணியடித்து சுய ஊரடங்கு கடைபிடித்த அவலமும் நடந்துள்ளது. கோன் எவ்வழியோ குடி அவ்வழி! என்று குறிப்பிட்டுள்ளார்.

­­

அவரின் கருத்திற்கு ரோமிங் ராமன் என்னும் டுவிட்டர் வாசி அலூர் ஷனவாஷ்க்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். அரசியல் என்பது பொதுநலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். உங்கள் கூட்டத்திடம் வன்மம் மட்டுமே இருக்கிறது. அது நல்லதல்ல. விரைவில் மக்களால் நீங்கள் மொத்தமாக தூக்கி வீசப்பட்டு விடுவீர்கள். நாலுநாள் முன்னாடி கோமாவில் இருந்தீங்களா? நாடு அம்பேத்கர் பேச்சை முழுவதுமாகக் கேட்டிருந்திருக்க வேண்டும். என்று சம்மட்டி அடிகொடுத்துள்ளார். பலரும் அலூர் ஷனவாஷ் கருத்திற்கு டுவிட்டரில் வருத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it