தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் நாடு முழுவதும் பண்டிகை குதூகலத்தில் மக்கள் திளைத்துள்ளனர்.தமிழகத்தில் தீபாவளியை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றன.குறிப்பாக புத்தாடைகளை வாங்க ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.சிறிய கடைகளில் தொடங்கி பிரம்மாண்ட ஷோ ரூம்கள் வரை மக்கள் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்க குவிக்கின்றனர். சென்னையை பொருத்தவரை தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய ஜவுளி சந்தைகளில் மக்கள் அதிகரித்து காணப்படுகிறது. தீபாளிக்கே உரிய
பட்டாசுகளை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மக்கள் கூட்டத்தை கருத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்டம் குவியும் இடங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். தியாகராய நகர், வண்ணாராப் பேட்டை, உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இடைவிடாத பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையை போல், திருச்சி, மதுரை, உள்ளிட்ட நகரங்களிலும் தீபாவளி களைக் கட்டியுள்ள நிலையில் அந்த பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.