தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் நாடக காதல் – பெண்களே உஷார் !

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் நாடக காதல் – பெண்களே உஷார் !

Share it if you like it

  • சென்னை தாம்பரம் அருகே தனியார் சட்ட கல்லூரியில் 25 வயது மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவரை பின் தொடர்ந்த பாலாஜி என்ற அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் அந்த மாணவியிடம் தன் காதலை சொல்லி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் தனது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார் என்றும் அவரிடம் சொன்னால் நம் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பார் என்று மேலும் ஐஸ் வைத்துள்ளார். இதனை நம்பி அந்த மாணவியும் அவனை காதலிக்க பின் மாணவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
  • அதனால் கர்ப்பமான அந்த மாணவி தன்னை திருமணம் செய்துகொள் என்று அந்த மாணவனிடம் கேட்க டிமிக்கி கொடுத்துள்ளார் அந்த காதல் மன்னன் பாலாஜி. இதனால் ஆத்திரமடைந்த  மாணவி அந்த மாணவன் குடும்பத்தாரிடம் தெரிவிக்க அதற்கு அந்த மாணவனும், அவரது தாய் கிருஷ்ணவேணி மற்றும் சகோதரி சுஜாதா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அந்த குழந்தையை கலைத்து விடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
  • மேலும் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் ரூபாய் 40 லட்சம் தர வேண்டும் என்றும் இல்லையென்றால் நீங்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  • படிக்கும் வயதில் தேவையில்லாமல் காதல் சாதல் என்று விழுந்து தன் வாழ்க்கையையும் பாழாக்கி பெற்றோரரையும் அவமானப்படுத்தும் நாடக காதலை இனிமேலும் எந்த பெண்ணும் நம்பாமல் இருக்க இது ஒரு பாடமாக இருக்கும் என்றும், திரௌபதி படத்தை பார்த்தாவது இனி விழிப்புடன் இருக்க கற்று கொள்ளுங்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 


Share it if you like it