தமிழக பா.ஜ.க தலைவராக எல். முருகன் அவர்களை நியமித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆணை பிறப்பித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஏழ்மையான விவசாய, குடும்பத்தில் இருந்து இப்பொறுப்பிற்கு வந்துள்ளார். இவர் பத்து வருடம் ஏ.பி.வி.பியில் பணியாற்றியுள்ளார். 15 வருடம் பா.ஜ.கவின் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தேசிய பட்டியலின ஆனணயத்தின் துனண தலைவர், என்பது மட்டுமில்லாமல் 15 வருடம் வழக்கறிஞர் அனுபவம் பெற்றவர். தலைவராக நியமித்துள்ள எல்.முருகனுக்கு, பா.ஜ.க தேசிய தலைவர்.ஹச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் சகோதரர் திரு.L.முருகன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். pic.twitter.com/ia1eVCzmV3
— H Raja (@HRajaBJP) March 11, 2020
இதனை அடுத்து ஒரு கடைகோடி தொண்டனையும் தலைவர் பதவிக்கு நியமிக்கும் கட்சி பா.ஜ.க என நெட்டிசன்கள் முருகனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.